SuperTopAds

சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!! -காத்திருந்த கப்பல்கள் கல்வாயை கடக்க ஒருவாரமாகுமாம்-

ஆசிரியர் - Editor II
சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!! -காத்திருந்த கப்பல்கள் கல்வாயை கடக்க ஒருவாரமாகுமாம்-

சுயஸ் கால்வாயை முடக்கியிருந்த எவர்கிவன் பிரமாண்ட வணிகக் கப்பல் விடுவிக்கப்பட்டதை அடுத்து கால்வாய் ஊடாக கப்பல் போக்குவரத்து வளமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று அக் கால்வாய் ஆணையத்தின் தலைவரான அட்மிரல் ஒசாமா ராபி உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

13 இழுவைப் படகுகளின் உதவியோடு 30,000 கன மீட்டர் மணலை தோண்டி எடுத்து நேற்று முன்தினம் பௌர்ணமி தினத்தில் எழுந்த அலைகளின் வேகத்தைப் பயன்படுத்தி கரைதட்டிய கப்பல் மீட்புக் குழுவினரால் அப்புறப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

சுயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்காக 24 மணி நேரமும் திறந்திருக்கும். எனினும் காத்திருக்கும் அனைத்துக் கப்பல்களும் கால்வாயைக் கடந்து செல்ல ஒரு வாரம் ஆகலாம் என சுயஸ் கால்வாய் ஆணையம் மேலும் கூறியுள்ளது.