அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டால், உயிருக்கு ஆபத்தை உண்டாக்கினால் தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு உரிமை உள்ளது..! பொலிஸ் பேச்சாளர்..

ஆசிரியர் - Editor I
அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டால், உயிருக்கு ஆபத்தை உண்டாக்கினால் தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு உரிமை உள்ளது..! பொலிஸ் பேச்சாளர்..

கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனக்குரிய அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டால் அவர் மூலம் உயிருக்கு ஆபத்தான முறையில் தாக்குதல் நடத்தப்படும்போது பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள உரிமையுள்ளது. 

மேற்கண்டவாறு பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். போக்குவரத்து பொலிஸாரினால் பொதுமகன் ஒருவன் மூர்க்கத்தனமாக தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் குறித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், சட்டத்தை அல்லது தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை தவறான பயன்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் ஒரு பொலிஸ் அதிகாரி நடந்து கொள்வாராக இருந்தால் 

அவரிடமிருந்து தற்காத்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கையினை பொதுமக்கள் எடுக்கலாம். அதற்கான உரித்து மக்களுக்கு உள்ளது என அவர் விளக்கியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு