வடமாகாண சுகாதார தொண்டர்கள் விடயம் அமைச்சரவையின் கவனத்திற்கு..! சுகாதார தொண்டர்களுடன் அமைச்சரை சந்தித்தார் அங்கஜன்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண சுகாதார தொண்டர்கள் விடயம் அமைச்சரவையின் கவனத்திற்கு..! சுகாதார தொண்டர்களுடன் அமைச்சரை சந்தித்தார் அங்கஜன்..

தமக்கு வழங்கப்பட்ட நியமனம் இரத்துச் செய்யப்பட்டதை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்திவரும் சுகாதார தொண்டர்கள் விடயத்தை அமைச்சரவைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் எடுத்துள்ளார். 

குறித்த விடயத்தினை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக அமைச்சர் மஹந்தானந்த அளுத்கமகேவிடம் சுகதார தொண்டர்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நோில் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார். 

இதனடிப்படையில் சுகாதார தொண்டர்கள் விடயம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படவிருக்கின்றது. முன்னதாக யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுகாதார தொண்டர்களை சந்தித்ததுடன், 

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடாக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்தமைக்கமைவாக இன்று கொழும்பில் அமைச்சரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் சுகாதார தொண்டர்கள் 

தமது விடயத்தை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்று நியமனம் கிடைக்க வழி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Radio