தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதிப்பதா? இல்லையா? முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ள அரசு..
தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் நடத்த அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் எடுக்கப்படும். என இராணுவ தளபதியும், கொவிட் 19 தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும். புத்தாண்டு தொடர்பான விழாக்களை நடத்துவதற்கான பரிந்துரைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில்
அந்த பரிந்துரைகள் குறித்து தொழில்நுட்பக் குழு இறுதி முடிவு எடுக்கும் என கூறினார்.