அரசாங்கம் சொல்வதையும் செய்ய தயாராக இல்லாத அரச அதிகாரிகள்..! பல முறைப்பாடுகள் வருகிறது பார்கிறேன் என்கிறார் மாவட்ட செயலர்..

ஆசிரியர் - Editor I
அரசாங்கம் சொல்வதையும் செய்ய தயாராக இல்லாத அரச அதிகாரிகள்..! பல முறைப்பாடுகள் வருகிறது பார்கிறேன் என்கிறார் மாவட்ட செயலர்..

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டதிட்டம் வழங்கலில் பயனாளர் தொிவில் 30 வருடகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் தனது சொந்த காணி மற்றும் வீட்டை இழந்த குடும்பம் ஒன்றுக்கு வீட்டுத்திட்டம் வழங்க கோப்பாய் பிரதேச செயலகம் மறுத்துள்ளது. 

அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன வீட்டு திட்டத்திற்கான பயனாளி தெரிவுகள் இடம்பெற்றுவரும் நிலையில் வீட்டு திட்டம் பெறுவதற்கு அடிப்படையான சகல தகுதிகளும் உள்ளபோதும் குறித்த குடும்பத்திற்கு வீட்டுத்திட்ட மறுக்கப்பட்டுள்ளது. 

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் காணி மற்றும் வீட்டை இழந்த குறித்த குடும்பத்தினர் கோப்பாய் பிரதேச செயலக எல்லைக்குள் வீட்டுத்திட்டம் ஒன்றை பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருக்கின்றனர். 

அதற்காக 2019ஆம் ஆண்டு காணி கொள்வனவு செய்து வீட்டுத் திட்டத்துக்கு விண்ணபமும் செய்துள்ளனர். 30 வருடங்களுக்கு மேலாக வாடகை வீட்டில் ஆறு அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் பல்வேறு சிரமங்கள் மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில்,

வீட்டுத்திட்டத்திற்காக பல தடவைகள் பிரதேச செயலகத்தை நாடியுள்ளனர். இதனடிப்படையில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தொிவில் மேற்படி குடும்பத்தினரின் பெயரும் உள்ளடக்கப்பட்டது.  ஆனாலும் இறுதி பட்டியலில் அவர்களுடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விடயம் தொடர்பில் கிராமத்துக்கும் பொறுப்பான துறை சார்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டபோது அவர்கள் கொள்வனவு செய்த காணியில் தற்காலிக வீடு அமைத்து குடி அமராததால் தமது மேலதிகாரிகளின் பரிந்துரையில் நீக்கப்பட்டதாக பதிலளித்துள்ளார். 

இதனால் வீட்டுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களால் முடிந்தளவுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான கல், மணல் போன்றவற்றை சிறிது சிறிதாக சேகரித்து வைத்த குடும்பத்தினர் பெரும் ஏமாற்றத்தை சந்தித்திருக்கின்றனர். 

தற்காலிக கொட்டகை அமைத்தால் மட்டுமே வீட்டுத்திட்டம் என அரசு உத்தரவிட்டுள்ளதா? 6 அங்கத்தவர்களை கொண்ட குறித்த குடும்பம் தற்காலிக வீடு ஒன்றை அமைப்பதற்கு 4 லட்சம் தொடக்கம் 5 லட்சம் ரூபாய் பணத்தை செலவிடவேண்டிய நிலை ஏற்படும், 

அவ்வாறு செலவிடும் அளவுக்கு பணம் இருந்தால் அவர்கள் எதற்காக அரசாங்கத்திடம் வீட்டுத்திட்டம் கேட்கவேண்டும்? 

இவ்வாறான நடைமுறைகளால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் பல குடும்பங்கள் தமது தற்காலிக வீட்டை பிடுங்கி நிரந்தர வீட்டுத் திட்டத்தை அமைக்கும்போது முழுமையான நிதி கிடைக்காததால் தற்போது நிர்க்கதியாகி நிற்கின்றனர்.

நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சுற்றுநிருபங்களை தாண்டி மக்களின் தேவைகளை அறிந்து கடமையைச் செய்யுங்கள் என அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை தொடர்பு கொண்டபோது 

வீட்டுத் திட்டம் தொடர்பான பல முறைப்பாடுகள் தனக்கு கிடைப்பதாகவும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு