யாழ்.காங்கேசன்துறை கடலில் மிதந்துவந்த மர்ம பொருள் அடையாளம் காணப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை கடலில் மிதந்துவந்த மர்ம பொருள் அடையாளம் காணப்பட்டது..!

யாழ்.காங்கேசன்துறை கடலில் மிதந்துவந்த "டயற்ரம்" என்ற கடல் உயிரினங்களுக்கான உணவு பொருள் எனவும், அச்சம் கொள்ள தேவையில்லை. 

மேற்கண்டவாறு தேசிய நீர்வாழ் உயிரினங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் விளக்கமளித்திருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், விசேடமாக மீன் இனங்களின் ஒரு வகை உணவுப் பொருளான “டயற்ராம்” ஒர் அங்கி உணவுப்பொருளாகும் அதுவே மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் அதனால் முதலில் பீதி ஏற்பட்டிருந்தபோதும் அந்த பொருள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் பீதியடைய தேவையில்லை.

மீன் இனங்களின் உணவுப் பொருளாக காணப்படுகின்ற டயற்ரம் கடல்நீரில் நைதரசன் குறையும்போது ஒட்சியேற்ரப்பட்டு கடல் நீரில் மிதக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.

இவ்வாறு மிதப்பதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பேராபத்துகள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாகவே உள்ளதாகவும் குறித்த அதிகாரி கூறியுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு