SuperTopAds

மியன்மாரில் தொடரும் போராட்டம்!! -ஒரேநாளில் 114 பேர் சுட்டுப் படுகொலை-

ஆசிரியர் - Editor II
மியன்மாரில் தொடரும் போராட்டம்!! -ஒரேநாளில் 114 பேர் சுட்டுப் படுகொலை-

மியன்மாரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர். 

அந்நாட்டு இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஆயுதப்படை நாளை முன்னிட்டு நேற்று யாங்கன், மாண்டலே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு நடைபெற்ற போதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரின் இரண்டாவது நகரமான மாண்டலேயில் சுட்டுக்கொல்லபட்ட 13 பேரில் ஐந்து பேர் இளைஞர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.