விசமிகள் அல்ல, நாங்களே கழிவு ஓயில் ஊற்றினோம்..! நல்லுார் கந்தசுவாமி ஆலய நிர்வாகம் அறிவிப்பு..

யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலய கட்டிட சுவர்களின் அடியில் கழிவு ஒயில் ஊற்றப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கிய நிலையில் கோவில் சுற்றாடலில் இளையோர் வந்து அமர்ந்திருப்பதை தடுக்கவே அவ்வாறு உற்றப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகம் கூறியுள்ளது.
இது குறித்து மேலும் தொியவருவதாவது, நல்லுார் ஆலய கட்டிடத்தின் சுவர்களில் கழிவு ஒயில் ஊற்றப்பட்டிருப்பதன் பின்னால் விஷமிகள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகியிருந்தது.
எனினும் அவ்வாறான கருத்தை மறுதலித்துள்ள ஆலய நிர்வாகம் கோவில் சூழலில் குறிப்பாக தேர்முட்டி உள்ளிட்ட பகுதிகளில் இளையோர் வந்து அமர்வதை தடுப்பதற்கும், கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் தாம் இவ்வாறு செய்துள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.