SuperTopAds

மோடியின் வருகையை எதிர்த்து பங்களாதேசில் போராட்டம்!! -4 பேர் சுட்டுக் கொலை: 33 பேர் கைது-

ஆசிரியர் - Editor II
மோடியின் வருகையை எதிர்த்து பங்களாதேசில் போராட்டம்!! -4 பேர் சுட்டுக் கொலை: 33 பேர் கைது-

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் நேற்று இடம்பெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டின் 50 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்கான இந்திய பிரதமர் மோடி நேற்று வெள்ளிக்கிழமை அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் டாக்காவில் இஸ்லாமிய மிதவாத அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாற்றமடைந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதலில் 40 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் டாக்கா மருத்துவக் கல்லூரியின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டம் தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.