மியான்மரில் இதுவரை 320 பேர் இராணுவத்தால் சுட்டுக் படுகொலை!! -80 பேர் தலையில் சுட்டப்பட்டனர்: 3,000 பேர் கைது-
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களின் போது இதுவரை 320 பேர் வரை இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 90 வீதம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 25 வீதம் பேர் தலையில் சுடப்பட்டுள்ளனர். ஏனையோர் தாக்குதல்களில் இறந்துள்ளனர் எனவும் மியான்மர் அரசியல் கைதிகளுக்கான உதவிக் கூட்டமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இதுவரை அங்கு 3,000 ற்கும் அதிகமானவர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அந்த அமைப்பு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.