SuperTopAds

பேஸ்புக் தகவல்கள் திருட்டு: உண்மையை ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க்

ஆசிரியர் - Admin
பேஸ்புக் தகவல்கள் திருட்டு: உண்மையை ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்காவில் வசிக்கும் 50 மில்லியின் பேஸ்புக் பயணாளிகளின் தகவல்களை திருடி, டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தியதாக லண்டனில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனத்தின் தலைமை அலுவலர் (CEO)அலெக்சாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். லண்டனைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், ஸ்டீபன், கே. பன்னன் மற்றும் ராபர்ட் மெர்சரால் ஆகியோரால் நிறுவப்பட்டது.

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, டொனால்டு ட்ரம்ப்பின் அரசியல் பிரசாரத்திற்காக உதவும் வகையில் டொனால்ட் வெற்றி பெறுவதற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தி, தங்களின் தனிப்பட்ட அரசியல் சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அவர்களின் ஃபேஸ்புக் நண்பர்கள் பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பட்சத்தில், பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருந்த தனிப்பட்ட தகவல்களை, ‘சைக்கோகிராஃபிக் மாடலிங் டெக்னிக்ஸ்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியுள்ளது.

இதனால் பேஸ்புக் பயணாளிகள் தங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டதா என்று அச்சம் அடைந்தனர். மேலும், பேஸ்புக் நிறுவனத்தின் மீது சர்ச்சைக்குரிய விமர்சனங்களும், கேள்விகளும் எழுப்பப்பட்டது.

இந்த சர்ச்சை குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பேஸ்புக் பயணாளிகளின் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான். இதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இது போன்ற தவறுகள் இனி நடக்காது என உறுதியளித்தார். மேலும், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா போன்ற மற்ற நேர்மையற்ற செயலிகள் அனைத்தையும் பேஸ்புக் தணிக்கை செய்யும் என கூறினார்.