SuperTopAds

வீட்டில் தந்தையின் மடியில் இருந்த 7 வயது சிறுமி சுட்டுப் படுகொலை!! -மியன்மார் இராணுவத்தின் வெறிச் செயல்-

ஆசிரியர் - Editor II
வீட்டில் தந்தையின் மடியில் இருந்த 7 வயது சிறுமி சுட்டுப் படுகொலை!! -மியன்மார் இராணுவத்தின் வெறிச் செயல்-

மியன்மாரில் நாட்டில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களின் போது 7 வயது சிறுமி ஒருவர் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச் சிறுமி அவரது வீட்டிலேயே கொல்லப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

மாண்டலே நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் வசித்து வந்த இச் சிறுமி, துப்பாக்கி சூட்டுக் காயத்தால் உயிரிழந்ததாக இறுதிச் சடங்கு ஏற்பாட்டு நிறுவனத்தினர் ரோய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் அந்தச் சிறுமியின் தந்தையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதன்போது அவரது மடியில் அமர்ந்திருந்த கின் மியோ சிட் என்ற குறித்த சிறுமி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகவும் மியன்மார் நொவ் என்ற மியன்மார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழாம் ஒன்று விரைந்து சென்ற போதும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.