அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..! புத்தாண்டுகால ஒன்கூடல்கள், பொருள் கொள்வனவுகள் ஆபத்தை ஏற்படுத்தும்..

ஆசிரியர் - Editor I
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..! புத்தாண்டுகால ஒன்கூடல்கள், பொருள் கொள்வனவுகள் ஆபத்தை ஏற்படுத்தும்..

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும், குறிப்பாக ஒன்றுகூடல்கள், பொருட்கள் கொள்வனவு உள்ளிட்டவற்றை நிறுத்துமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் சார்பில் வைத்தியர் நவீன் டி சொய்ஷா மேலும் தொிவிக்கையில்,  சமூகத்தில் ஒன்று கூடல், புதிய ஆடைகளைக் கொள்வனவு செய்யக் கடைகளுக்குச் செல்லுதல், வீடுகளைச் சுத்தம் செய்தல் 

புதிய வடிவில் மாற்றுதல் இதன்போது சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும். என வைத்தியர் நவீன் டி சோய்சா தெரிவித்துள்ளார். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் 

மற்றும் தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தல் வேண்டும் என அவர் தெரிவித் துள்ளார்.கொரோனா தொற்றிலிருந்து நாட்டை மீட்க வேண்டும் என்றால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அத்தோடு, கடைகளுக்குச் செல்வதை முடிந்தவரைக் குறைத்துக் கொள்ளுமாறு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சோய்சா தெரி வித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு