ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக விவாதத்தை கோரிய எதிர்கட்சிகள்..! நிராகரித்த மஹிந்த..

ஆசிரியர் - Editor I
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக விவாதத்தை கோரிய எதிர்கட்சிகள்..! நிராகரித்த மஹிந்த..

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு எதிர்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.

இன்றைய தினம் நாடாளுமன்றில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளியிட்டார். குறிப்பாக இந்த தீர்மானம் என்பது முழுமையாக பக்கச்சார்பானதாகும். அதனை நிராகரிக்கின்றோம். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிமுறை மற்றும் போர் என்பவற்றை விமர்சிப்பதாக இந்த தீர்மானம் உள்ளது. ஆகவே இதனை நிராகரிக்கின்றோம். மேலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவில் 

போரில் காணாமல் போனோர், அவர்கள் பிரித்தானியாவில் தங்கியிருக்கின்றார்களா என்பது பற்றி பிரிட்டன் தெளிவுபடுத்த வேண்டும், போரில் உயிரிழந்தவர்கள் பற்றி முறையிட முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, குறித்த தீர்மானமானது 17 பக்கங்களைக் கொண்டது. 

அதில் இரண்டு பக்கங்களில் மாத்திரமே போர் பற்றி கூறப்பட்டுள்ளதே தவிர, ஏனைய அனைத்துப் பக்கங்களிலும் ஜனாதிபதி கோட்டாபயவின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் பற்றி உள்ளன என்று கூறினார்.

இதனால் சபையில் சிறிதுநேரம் கூச்சல்நிலை ஏற்பட்டது. இதனிடைய தீர்மானம் மீது எதிர்கட்சியினர் விவாதத்தை கோரிய போதும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அக்கோரிக்கையை நிராகரித்தார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு