நாட்டின் பேராபத்து நிலையை மதிப்பீடு செய்ய முடியவில்லை..! PCR பரிசோதனைகளை மீள அதிகரியுங்கள்..
இலங்கையில் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமையால் நாட்டின் ஆபத்தான நிலையை சரியாக மதிப்பீடு செய்ய முடியாதுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் உபில் ரோஹண கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காகக் கடந்த சில மாதங்களாக நாளாந்தம் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .
ஆனால், தற்போது 5 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாட்களில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைய இதுவே காரணம்
நாட்டின் ஆபத்தான நிலைமையைச் சரியாக மதிப்பிடுவதற்கு பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.