SuperTopAds

ஜெர்மனியில் ஏப்ரல் 18 ஆம் திகதிவரை ஊரடங்கு!! -ஈஸ்டரின் போது தீவிரமாகும் என்று அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
ஜெர்மனியில் ஏப்ரல் 18 ஆம் திகதிவரை ஊரடங்கு!! -ஈஸ்டரின் போது தீவிரமாகும் என்று அறிவிப்பு-

ஜெர்மனியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திபதி வரை ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

அந்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

இந்நிலையில், ஜெர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அந்நாட்டின் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈஸ்டர் விடுமுறைகளில் 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.