ஆயுததாரியால் வணிக வளாகமொன்று முற்றுகை!! -பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த 10 பேர் சுட்க் கொலை-
அமெரிக்க நாட்டின் கொலராடோ மாகாணம் போல்டர் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் அயுததாரி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
இந்த கொடூர சம்பத்தை நிகழ்த்திய நபர் சம்பவ இடத்தில் வைத்தே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்குள் நேற்று திங்கட்கிழமை மாலை நுழைந்த ஆயுததாரி அங்கிருந்த மக்களை பணயக் கைதியாக பிடித்துக்கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், ஆயுததாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணயக் கைதிகளை மீட்க முயன்றனர். இருப்பினும் திடீரென ஆத்திரம் அடைந்த ஆயுததாரி பணயக் கைதிகளை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதன் போது பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து வணிக வளாகத்துக்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸார் அயுததாரியை மடக்கி பிடித்தனர்.