7 கோடியே 19 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் யாழ்.வடமராட்சி கிழக்கில் இருவர் கைது, கடற்படை அதிரடி..!

யாழ்.வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் சுமார் 7 கோடியே 19 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 239 கிலோ 850 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா தொகையை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் 31 மற்றும் 34 வயதுடைய வெற்றிலைக்கேணி மற்றும் ஆழியவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.