அந்த கோஷ்டிக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை..! தேர்தல் கூட்டு தேர்தலோடு முடிந்தது. மனம் திறந்தார் அங்கஜன்..

ஆசிரியர் - Editor I
அந்த கோஷ்டிக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை..! தேர்தல் கூட்டு தேர்தலோடு முடிந்தது. மனம் திறந்தார் அங்கஜன்..

நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் கோஷ்டிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். 

நீர்ப்பாசன அமைச்சின் கீழ் கிராமிய வயல்கள் நிலங்கள் மற்றும் குளங்கள் நீர்த்தேக்கங்கள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் அரியாலை கிழக்கு ஐயனார் கோயில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம்,

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் கோஷ்டியின் தலைவர் 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எம்முடன் இணைந்து போட்டியிட்டார். அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர் என அறிந்தே அவரை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின் அவர் சிவில் அமைப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் எம்முடன் சேர்ந்து போட்டியிட்டதால் அவர் எம்முடன் இணைந்து தான் செயற்படுகின்றார் என சிலர் தவறாக நினைக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூட 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தேர்தலில் என்னுடன் போட்டியிட்டார்.பின்னர் கட்சியை விட்டு தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்றம் சென்றிருக்கிறார். சாணக்கியன் கொள்கை எனது கொள்கையுடன் ஒத்துப்போகாது 

அவரது செயற்பாடுகள் எனது செயற்பாடுகளுடன் ஒத்துப்போக முடியாது இவ்வாறு நடைமுறைப் பிரச்சினைகளை இருக்கின்றன. நல்லூரில் போராட்டம் நடத்துபவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் தெரிவித்து வரும் சில கருத்துக்கள் 

க்களை வேதனை படுத்துவதாக அமைந்துள்ள நிலையில் அதனை அவர் உணர்வார் என நான் நம்புகிறேன். தேர்தல் காலங்களில் பல நபர்களை தெரிவு செய்கிறோம் சில நபர்களுடன் மட்டும் தொடர்ந்து பயணிக்கின்றோம் சிலருடன் தேர்தல் கால கூட்டு மட்டுமே 

என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு