பாடசாலை பேருந்து மீது புகைரதம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதிகோரி போராட்டம்..!
பாடசாலை பேருந்து மீது புகைரதம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த பாடசாலை சிறுவனுக்கு நீதிகோரி இன்று காலை 7.45 மணியளவில் தலைமன்னார் - பியர் அரசியல் தமிழ்கலவன் பாடசாலை முன்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள ரயில் கடவை வரை பதாதைகளை ஏந்தியும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்.இதன்போது போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல்,
மன்னார் பிரதேச செயலாளர், ரயில்வே திணைக்கள அதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினர்.இந்த நிலையில், குறித்த ரயில் கடவைக்கான தடையினை புதிதாக அமைத்து, அதற்கான பாதுகாப்பு ஊழியரை புதிதாக நியமிக்குமாறு அவர்களிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக வயோதிபர் இல்லாமல் நடுத்தர வயதுடையவர்களை கடமையில் ஈடுபடுத்தி, குறித்த ரயில் கடவையில் பொலிஸாரின் கண்காணிப்பு இடம்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.இதனையடுத்து, குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக துரித நடவடிக்கைகளை
முன்னெடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசாங்க அதிபர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள ரயில் கடவையில் கடந்த 16 ஆம் திகதி தனியார் பேருந்தும் ரயிலும் மோதிக்கொண்டதில்
தலைமன்னார் - பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த பாலச்சந்திரன் தருண் (வயது-14)என்ற மாணவன் உயிரிழந்தார்.அத்தோடு, பொது மக்கள் 25 பேர் வரையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.