சிங்கள தலைவர்களை சந்திக்கமாட்டோம் என மார்தட்டியவர்கள் அதே சிங்கள தலைவர்கள் முன் கைகட்டி கோரிக்கையுடன நிற்பது சிரிப்பூட்டும் நிகழ்வு..!

ஆசிரியர் - Editor I
சிங்கள தலைவர்களை சந்திக்கமாட்டோம் என மார்தட்டியவர்கள் அதே சிங்கள தலைவர்கள் முன் கைகட்டி கோரிக்கையுடன நிற்பது சிரிப்பூட்டும் நிகழ்வு..!

சிங்கள தலைவர்களை சந்திக்கப்போவதில்லை. என கூறிவந்த தமிழ் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் இப்போது அதே சிங்கள தலைவர்களிடம் கைகட்டி கோரிக்கையுடன் நிற்பது சிரிப்பூட்டும் சம்பவம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணங்களின் கூறியுள்ளார். 

யாழ்.இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இளையோர்களின் கலந்துரையாடலில் பங்குபற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் சிங்கள தலைவர்களை சந்திக்கக் கூடாதெனவும், 

தாம் ஒருபோதும் சந்திக்கமாட்டோம். எனவும் கூறியவர்கள் அதே சிங்கள தலைவர்கள் முன்பாக கை காட்டி நிற்கின்ற நிலையில் நானும் சுமந்திரனும் அவ்வாறு நிக்கவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவி வந்த வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாகச் சொல்லி நிறைவேற்றியுள்ளோம். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு பின்னர் என் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

பொத்துவில் பொலிகண்டி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு சகோதர முஸ்லிம் இன மக்கள் பெரும் வரவேற்பை தந்திருந்தார்கள் அவர்களின் பேராதரவு எனது பயணத்தை உற்சாகப்படுத்தியது. இருபத்தி இரண்டு வயதிலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டளராக தெரிவு செய்யப்பட்டமை 

நான் செய்த தவறு என்பதை உணர்ந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட தீர்மானித்தேன். கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நெருக்கடிகள் உருவாகியுள்ளன மேச்சல் நிலங்கள் அபகரிப்பு, நில ஆக்கிரமிப்பு, தொல்பொருள் திணைக்களப் பிரச்சனை எனப் பல்வேறு நெருக்குதல்கள் உருவாகியுள்ளன.

நான் இளைஞனாக இருக்கின்ற நிலையில் குறித்த விடயங்களை கையாளுவது என்னை அதிகமானோருக்கு பிடித்திருக்கலாம். அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா விழாமல் சட்டத்தரணியாக இருந்தபோது நடுவீதியில் உட்கார்ந்து வாகனங்களை உட் செல்லவிடாது 

போராட்டம் நடத்திய திருகோணமலை மாவட்டத்தில் அவருக்கு ஆதரவை பெருக வைத்தது.இன்றைய இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சனையாக இருக்கின்ற நிலையில் அதிகம் சம்பாதிக்கும் தனியார் துறையை ஒதுக்கிவிட்டு அரச வேலைவாய்ப்புகளில் 

இணைவது இடம்பெற்று வருகிறதுது.ஆகவே நமது தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழ் தேசியம் என்கின்ற ஒரு அலகினை சரியான வழியில் கொண்டு செல்வதற்கு

 நானும் உறுதுணையாக நிற்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு