பிரான்ஸ் நாட்டின் கலாசாரத் துறை அமைச்சருக்கு கொரோனா!! -நிகழ்வுகளை ரத்துச் செய்து தனிமைப்படுத்திக் கொண்டார்-
பிரான்ஸ் நாட்டின் கலாசாரத் துறை அமைச்சர் ரோஸ்லின் பேச்லோட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில்:-
சுவாச பிரச்னை காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டேன்.
இதனால் எதிர்வரும் இரு வாரத்திற்கான எனது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்க உள்ளேன். இதை தவறாமல் உங்களிடம் தெரிவிப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.