SuperTopAds

சிரிய மருத்துவமனை மீது அடுத்தடுத்து ரொக்கட் தாக்குதல்;!! -குழந்தை உட்பட 5 பேர் பலி, 11 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
சிரிய மருத்துவமனை மீது அடுத்தடுத்து ரொக்கட் தாக்குதல்;!! -குழந்தை உட்பட 5 பேர் பலி, 11 பேர் காயம்-

சிரியா நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது இன்று திங்கட்கிழமை அடுத்தடுத்து 6 ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் மருத்துவமனையிலிருந்த குழந்தை, மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 5 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிலர் மோசமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரகக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்நாட்டின்; அலெப்போ மாகாணத்தில் உள்ளது அல்தரிப் நகரத்தில் மருத்துமனை மீதே மேற்படித் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியா நாட்டின் ஜனாதிபதி ஆசாத் தலைமையிலான படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகின்னறது. இந்த நிலையில் சிரியாவில் சமீப காலமாக இஸ்ரேல் மற்றும் துருக்கி படையினர் தங்களது தாக்குதலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.