ஊடக மாபியாக்களின் திட்டம் என்னிடம் வாய்க்காது..! பாடம் புகட்டுவேன், அதற்கான வழியும் எனக்கு தொியும், ஜனாதிபதி காட்டம்..

ஆசிரியர் - Editor I
ஊடக மாபியாக்களின் திட்டம் என்னிடம் வாய்க்காது..! பாடம் புகட்டுவேன், அதற்கான வழியும் எனக்கு தொியும், ஜனாதிபதி காட்டம்..

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தாங்கள் விரும்பிய படி நாட்டை கொண்டு செல்வதல்ல. அது என்னிடம் நடக்காது. அவ்வாறு நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டும் வழி எனக்கு நன்றாகவே தொியும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளார். 

ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடலின் மற்றுமொரு கட்டம் இன்று நுவரெலியா – வலப்பனையில் இடம்பெற்றது. இதன்போது, சுற்றாடல் அழிப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

தாம் சுற்றாடலை நேசிப்பதாகவும் ஒருபோதும் அழிக்க விரும்பியதில்லை. ஊடக நிறுவனங்களில் புதுமையானவர்களே உள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. அதுவல்ல ஊடக சுதந்திரம். அது ஒரு மாஃபியா. 

ஊடக உரிமையாளருக்கு தேவையான விதத்தில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு முயல்வதாக இருந்தால் அது ஒரு மாஃபியா. அதுவே இடம்பெறுகின்றது. நாட்டில் அரசர்கள் இல்லை. மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் இருந்தார்கள். இங்கு மாஃபியாவே இடம்பெறுகின்றது. 

மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நான் நாட்டை நிர்வகித்துள்ளேன். 

எந்தவொரு ஊடகத்திற்கும் எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும், அவர்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. செய்ய முடியுமான முறைகளும் உள்ளன. அதனை நான் செயற்படுத்துவேன். அந்த ஊடகம் மாத்திரம் அல்ல 

தேசிய சிந்தனையில் உள்ள ஊடகங்களிலும் சிலர் கும்புக் மரங்களை வெட்டியதாக பொய்யான தகவல்களை வௌியிட்டிருந்தனர். யார் என்று நான் தேடிப் பார்த்தேன். அந்த ஊடகமே யுத்த காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்டது. அவர்களே தற்போது நுழைந்து இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். 

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்ட குழுவினரே மீண்டும் எழுந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு