யாழ்.மாவட்ட செயலகத்தில் நடக்கும் கூட்டங்களில் கூட்டமைப்பு கலந்து கொள்வதை தடுக்க சதி நடக்கிறதா? அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளால் ஆட்டுவிக்கப்படுகிறார்களா?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடக்கும் கூட்டங்களில் கூட்டமைப்பு கலந்து கொள்வதை தடுக்க சதி நடக்கிறதா? அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளால் ஆட்டுவிக்கப்படுகிறார்களா?

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் முக்கிய கூட்டங்கள், கலந்துரையாடல்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளை அழைப்பதில் அரச அதிகாரிகள் சிலர் விருப்பமற்று இருக்கிறார்களா? அல்லது அவ்வாறு நடந்து கொள்ளுமாறு சில அரசியல்வாதிகளால் துாண்டப்படுகிறார்களா?

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். சில முக்கிய கூட்டங்கள், கலந்துரையாடல்கள் இடம்பெறும்போது அவை நடைபெறும் தினத்திற்கு முதல் நாள் மாலை அலுவலக நேரம் முடிந்த 

பின்னர் அழைப்பு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கலந்துகொண்ட கூட்டத்திற்கான அழைப்பு அதற்கு முதல் நாள் மாலை 4.57 மணிக்கே தமக்கு அனுப்பபட்டதாகவும்

யாழ்.மாவட்ட செயலக பிரதான திட்டமிடல் அதிகாரி அலுவலக தொலைநகர் மூலம் அனுப்பபட்டதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அமைச்சர் முன்பாக அம்பலப்படுத்தியிருந்தனர். 

இதேபோல் கூட்டத்தை நடத்துவதற்கான ஒழுங்குகளிலும் பல்வேறு குறைபாடுகள் உள்ள நிலையில் யாழ்.மாவட்ட செயலக பிரதான திட்டமிடல் அதிகாரி ஒரு சில அரசியல் கட்சிகளால் ஆட்டுவிக்கப்படுகிறாரா? அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதை 

அவர் விரும்பவில்லையா? என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு