கர்ப்பிணி பெண் கொடூர கொலை!! -வயிற்றை கிழித்து குழந்தையை திருடி சென்ற பெண்-
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவரை கொலை செய்து, மற்றுமொரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை திருடிச் சென்றுள்ளார்.
பிரேசில் நாட்டில் நேற்று மதியம், 21 வயதான பமீல்லா பெரீரா என்ற கர்ப்பிணி இளம்பெண், கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யபட்டார். இருப்பினும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையையும் காணவில்லை.
குழந்தையை பொலிஸார் தேடி வந்துள்ளனர். அதே நேரத்தில், அருகிலுள்ள வைத்தியசாலையில் 22 வயதுள்ள பெண், இறந்த குழந்தை ஒன்றுடன் சென்றுள்ளார்.
வீட்டில், தானே குழந்தை பெற்றுக்கொண்டதாகவும், குழந்தையுடன் படியிலிருந்து இறங்கும்போது தடுக்கி விழுந்துவிட்டதாகவும் அந்த பெண் வைத்தியர்களிடம் கூறியுள்ளார்.
குறித்த பெண்னை வைத்தியர்கள் பரிசோதித்தபோது அதற்கான அடையாளங்கள் எதுவும் அவரிடம் இல்லை. சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவலளித்தது.
பொலிஸ் விசாரணையில், அந்த பெண் கர்ப்பமுற்றிருப்பதுபோல் நடித்துவந்ததும், சம்பவம் நடப்பதற்கு முன்தினம், அவர் பமீல்லாவுடன் கூட இருந்ததும் தெரியவந்துள்ளது.
குழந்தை எவ்வாறு இறந்தது என்பதை கண்டறிய குழந்தையின் சடலம் பிதேச பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் ஒரு கர்ப்பிணிப்பெண்ணை கொடூரமாக கொலை செய்து, அவரது வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.