SuperTopAds

பல ஆண்டுகளாக தொடரவுள்ள கொரோனா தொற்று!! -எதில்காலத்தில் பருவகால நோயாக மாறும் என்று ஜ.நா எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
பல ஆண்டுகளாக தொடரவுள்ள கொரோனா தொற்று!! -எதில்காலத்தில் பருவகால நோயாக மாறும் என்று ஜ.நா எச்சரிக்கை-

கொரோனா வைரஸ் தொற்று பல ஆண்டுகளாக தொடர்ந்தால் அது பருவகால நோயாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிகை செய்துள்ளது. 

ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு அமைத்த 16 பேர் கொண்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

குறிப்பாக இலையுதிர், குளிர்கால உச்சநிலை காலநிலைகளில்  கொரோனா வைரஸ் பரவும். இது பல ஆண்டுகளாக நீடித்தால், கொரோனா ஒரு வலுவான பருவகால நோயாக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கள் உள்ளது. 

கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ், கோவ்-2 போன்ற வைரஸ்கள் காலப்போக்கில் பருவகால நோயாக  மாறக்கூடும் என்றுள்ளது.