பிரேசிலை நாட்டை மீண்டும் உலுக்கும் கொரோனா!! -ஒரே நாளில் 90,830 பேருக்கு தொற்று-
பிரேசிலில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 90 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
உலக அளவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் பிரேசில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து செல்கின்றது.
பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 90 ஆயிரத்து 830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 17 இலட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,736 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்து 85 ஆயிரத்து 136 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 11 இலட்சமாக உள்ளது.