நின்மதியாக தூங்க விரும்பினால் வட கொரியாவை சீண்டாதீர்கள்!! -அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த கிம் யோ ஜாங்-
அமெரிக்கர்கள் அடுத்த 4 வருடங்களுக்கு நின்மதியாகத் உறங்க விரும்பினால் வட கொரியாவைச் சீண்டாமல் இருப்பது நல்லது என வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தென்கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்பாக நேற்று கிம் யோ-ஜாங் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அமெரிக்கா - தென் கொரியா இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை கிம் யோ-ஜாங் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரிய நாடுகள் குறித்த தனது கொள்கையை வெளியிடத் தயாராக உள்ள நிலையில் கிம் யோ-ஜாங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் கிம் ஜாங்-உன்னுக்கு அடுத்து அதிக செல்வாக்கு பெற்றுள்ள இவரது இந்தக் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.