ஜோ பைடன், பில்கேட்ஸ் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்!! -72.5 இலட்சம் மோசடி செய்த இளைஞருக்கு 3 வருட சிறை-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பில் கேட்ஸ் உள்ளிட்ட என பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கி, மோசடி செய்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 வயதான கிரஹாம் இவான் கிளார்க் என்ற இளைஞர் குறித்த பிரபரங்களில் டுவிட்டர் கணக்குகளை முடக்கி அதன் மூலம் 72.5 இலட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையின்போது அவர் டிஜிட்டல் சாதனங்களை சில நிபந்தனைகளுடன் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.