SuperTopAds

மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் மேலும் 20 பேர் படுகொலை!!

ஆசிரியர் - Editor II
மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் மேலும் 20 பேர் படுகொலை!!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதலில் மேலும் 20 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரி மாதம் முதல் நடத்தப்பட்டுவரும் இப் போராட்டத்தில் இதுவரையில் 180 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த நாட்டிலுள்ள மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.