SuperTopAds

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இரத்தம் உறையும் சம்பவம்..! தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறுத்தும் தீர்மானம் எதுவுமில்லை என்கிறது அரசு..

ஆசிரியர் - Editor I
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இரத்தம் உறையும் சம்பவம்..! தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறுத்தும் தீர்மானம் எதுவுமில்லை என்கிறது அரசு..

அஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தும் எந்தவொரு தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. என அமைச்சர் ரமேஸ் பத்திரண கூறியுள்ளார். 

ஐரோப்பாவில் பல நாடுகளில் அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாடு நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை அவ்வாறான தீர்மானம எடுக்கப்படவில்லை. என அறிவித்துள்ளது. 

தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்பட்ட இரத்த உறைவு போன்ற அச்சம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது சாதாரணமாக இரத்தம் உறையும் சம்பவமாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு இரத்தம் உறைதல், இருதய நோய், பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்புகள் உண்டு. 

ஆனால் இந்த தடுப்பூசியினால் அது அதிகரிக்காது என்பதையே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.