பயண கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துங்கள்..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடாப்பிடி..
தமிழ், சிங்கள புத்தாண்டு நெருங்கும் நிலையில் பயண கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறித்த சங்கத்தின் ஊடகபேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இதனை கூறினார்.