போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி..! உசார் நிலையில் பாதுகாப்பு பிரிவு..

ஆசிரியர் - Editor I
போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி..! உசார் நிலையில் பாதுகாப்பு பிரிவு..

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த நபர் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் கூறுகையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தியவேளை அவர் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு நிதி உதவி வழங்கியமை தெரியவந்துள்ளது. 

போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சில மாதங்களிற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட பாணந்துறையை சேர்ந்த நபரை விசாரணைக்கு உட்படுத்தியவேளை அவர் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்தமை தெரியவந்துள்ளது.

விசாரணைகளின்போது சந்தேகநபருக்கு துபாயிலிருந்து பெருமளவு பணம் கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் அந்த பணத்தை இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் 

அமைப்பொன்றிற்கு வழங்கியுள்ளார். என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து சந்தேகநபரை பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் விசாரணைகளிற்காக 

ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு