SuperTopAds

மியான்மாரில் கொடூரமான நடந்து கொள்ளும் இராணுவம்!! -மேலும் 38 பேர் சுட்டுப் படுகொலை: தொழிற்சாலைக்கும் தீவைப்பு-

ஆசிரியர் - Editor II
மியான்மாரில் கொடூரமான நடந்து கொள்ளும் இராணுவம்!! -மேலும் 38 பேர் சுட்டுப் படுகொலை: தொழிற்சாலைக்கும் தீவைப்பு-

மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 38 பேர் நேற்றும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போராட்டக்காரர்களுடன் நடந்த மோதலில் பொலிஸார் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

மேலும் அந்நாட்டின் ஹிலிங்தாயா புறநகரப் பகுதியில் சீனாவின் உதவியுடன் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு நேற்று அடையாளம் தெரியாத குழுவினர் தீவைக்கப்பட்டது. 

தீவைப்புச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இச் சம்பவத்தில் 22 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

ஏனைய பல இடங்களில் இடம்பெற்ற இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மேலும் 16 பேர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.