அவுஸ்திரேலிய எம்.பிக்கள் ஆதரவு: வலுவடையும் அம்பிகையின் போராட்டம்!! -அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து அரசை வலியுறுத்தி அறிக்கை-
ஈழத் தமிழ் பிரித்தானிய பெண் அம்பிகை செல்வகுமாரின் லண்டலின் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு டேவிட் சிப்ரிட்ஜ் உள்ளிட்ட அவுஸ்திரேலிய எம்.பிக்கள் மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாண செனட்டர் மெஹ்ரீன் ப்பாரூகி ஆகியோர் ஆதரவு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி பாராளுமுன்ற உறுப்பினர் டேவிட் சிப்ரிட்ஜ் தனது அறிக்கையில்:- எந்தவொரு அரசாங்கமும் மனித உரிமைகளை உறுதி செய்யும் தங்களது சுயாதீன நடவடிக்கைகளை உறுதி செய்ய அஞ்சக்கூடாது. அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமார் உடல்நிலை குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசவுத்வேல்ஸ் மாகாண செனட்டர் மெஹ்ரீன் ப்பாரூகி தனது அறிக்கையில்:- உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுக்கு எனது ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.