அம்பிகைக்கு ஆதரவாக லண்டன் மக்கள் போராட்டம்!! -ஒன்றுகூடியவர்கள் மீது பொலிஸ் தாக்குதல்-
லண்டனில் அம்பிகை செல்வகுமார் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒன்றுகூடிய தமிழ் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அம்பிகைக்கு ஆதரவாக ஒன்றுகூடியவர்களின் போராட்டம் வலுவடைய தொடங்கியதை அடுத்து போராட்டத்தை முறியடிக்க பொலிஸார் முயன்றவேளை, அதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன்போது போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர்.
இந்தனால் இரு தரப்பினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின்போது போராட்டக்காரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலர் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.