SuperTopAds

ஜ.நா உயர் அதிகாரி மீது தற்கொலை தாக்குதல்!! -ஆப்கானிஸ்தானில் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
ஜ.நா உயர் அதிகாரி மீது தற்கொலை தாக்குதல்!! -ஆப்கானிஸ்தானில் சம்பவம்-

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரியை குறிவைத்து தீவிரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 5 பேர் உயிரிழந்தனர்.

கடந்த வியாழன் காலை காபுலில் இருந்து ஜலாலாபாத் நகர் நோக்கி சென்ற ஐக்கிய நாடுகள் அதிகாரியின் வாகனம் மீது பயங்கரவாதிகள் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோத முயன்றனர்.

அப்போது அவர்கள் பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது மோதியதால் அதில் பயணித்த 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் 5 பேரும் இறந்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.