தடுப்பூசி பெற்றுக்கொண்ட பலருக்கு இரத்தம் உறைதல், தீவிர காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட பல சிக்கல்..! பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்..

ஆசிரியர் - Editor I
தடுப்பூசி பெற்றுக்கொண்ட பலருக்கு இரத்தம் உறைதல், தீவிர காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட பல சிக்கல்..! பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்..

இலங்கையில் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 30 பேருக்கு இதுவரையில் குருதி உறைதல் ஏற்பட்டிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய கூறியிருக்கின்றார். 

தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்படும் சிக்கல் நிலைமைகள் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது நாடு முழுவதும் சுகாதார அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் 

கொரோனா நோயை தடுப்பதற்காக கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் சில ஒவ்வாமை தன்மைகள் குறித்து அறிக்கையிடப்படுகின்றன.

அதன்படி, 30 பேருக்கு குருதி உறைதல் ஏற்பட்டுள்ளது. அதுதவிர காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. அவை சாதாரணமானவை என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் இலங்கையில் பதிவான குறித்த எண்ணிக்கையானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்தளவானது எனக் குறிப்பிடலாம் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு