SuperTopAds

அமெரிக்க பொலிஸ் படுகொலை செய்த கறுப்பினத்தவரின் குடும்பத்திற்கு 27 மில்லியன் டொலர்!!

ஆசிரியர் - Editor II
அமெரிக்க பொலிஸ் படுகொலை செய்த கறுப்பினத்தவரின் குடும்பத்திற்கு 27 மில்லியன் டொலர்!!

அமெரிக்க பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் குடும்பத்திற்கு 27 மில்லியன் டொலரை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுமு. 

அவர் கடந்த வருடம் மே மாதம் அமெரிக்க பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், அது தொடர்பில் இடம்பெற்ற சிவில் வழக்கு ஒன்றில், மினியாபொலிஸ் நகர சபை இந்தத் தீர்வை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்த முடிவு அமெரிக்க வரலாற்றில் ஒரு சிவில் உரிமை வழக்கு விசாரணையில் மிகப்பெரிய தீர்வாகும் என சட்டத்தரணிகள் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.