SuperTopAds

மியான்மரில் இராணுவத்தால் மேலும் 7 பேர் சுட்டுப் படுகொலை!! -இதுவரை 70 பொது மக்கள் அநியாய பலி-

ஆசிரியர் - Editor II
மியான்மரில் இராணுவத்தால் மேலும் 7 பேர் சுட்டுப் படுகொலை!! -இதுவரை 70 பொது மக்கள் அநியாய பலி-

மியான்மர் இராணுவத்தால் நேற்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் மேலும் 7 பேர் தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

இவற்றுடன், அங்கு இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஐக் கடந்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட 7 பேரில் 6 பேர் மியாயிங் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என மியான்மர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.