SuperTopAds

வித்தியாசமான, அதிக சுவையான மீன்களை விமானம் மூலம் லண்டன் அனுப்ப முயற்சி..! சுங்க அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..

ஆசிரியர் - Editor I
வித்தியாசமான, அதிக சுவையான மீன்களை விமானம் மூலம் லண்டன் அனுப்ப முயற்சி..! சுங்க அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..

இலங்கையில் பிடிப்பதற்கும், வைத்திருப்பதற்கும், கொண்டுசெல்வதற்கும், கொள்முதல் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ள அதிக சுவையான மீனை கடத்த முயற்சித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி முனையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்தபோது சுங்க பல்லுயிர் பிரிவின் அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 60 கிலோகிராம் எடையுள்ள இந்த மீன் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, இலங்கை ஏயர்லைன்ஸின் யுஎல் -503 என்ற விமானத்தின் மூலம் இங்கிலாந்தின் லண்டனுக்கு நேற்று காலை ஏற்றுமதி செய்ய, கட்டுநாயக்க விமான நிலைய பொருட்கள் 

ஏற்றுமதி முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்போதே சுங்க அதிகாரிகளினால் இந்த மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முறையான ஆய்வுகளுக்கு பின்னர் அது அழிக்கப்படவுள்ளது. வித்தியாசமான, 

அதிக சுவை கொண்ட இந்த மீன்களுக்கு ஐரோப்பா உட்பட பல நாடுகளில் அதிக தேவை உள்ளது. மீன்வள மற்றும் நீர்வள ஆதாரச் சட்டத்தின் கீழ், 11.04.2017 அன்று வெளியிடப்பட்ட அசாதாரண அரசிதழ் அறிவிப்பின் கீழ், இந்த மீன்களைப் பிடிப்பது, 

வைத்திருத்தல், போக்குவரத்து, கொள்முதல், விற்பனை, ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளது.