அமெரிக்க பாராளுமன்றத்தின் மீது தாக்குதலா? -அதீத பாதுகாப்பு மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு-
அமெரிக்க பாராளுமன்றத்திற்கு கடந்த 4 ஆம் திகதி தாக்குதல் நடத்துவதற்கும், பாராளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் பயங்கரவாதிகள் திட்டம் போட்டிருப்பதாக அமெரிக்க பொலிஸாருக்கு உளவு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் அதிகளவான பொலிஸ் தேசிய பாதுகாப்பு படை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அச்சுறுத்தல் நிலை நீடிக்கப்பட்டுவரும் நிலையில் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுவரும் தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து அமெரிக்க இராணுவம் உத்தரவிட்டுள்ளது.