SuperTopAds

அமெரிக்கா - கனடா எல்லைகளை திறக்க கோரிக்கை!! -ஜோ பைடனுக்கு அவசர கடிதம்-

ஆசிரியர் - Editor II
அமெரிக்கா - கனடா எல்லைகளை திறக்க கோரிக்கை!! -ஜோ பைடனுக்கு அவசர கடிதம்-

அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளின் எல்லைகளை மீண்டும் திறக்க வேண்டும் என அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நியூயோர்க்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதி பிரையன் ஹிக்கின்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ஏனைய சில அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் இணைந்து அவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று நோயை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கா - கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.