தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரரின் தாயார் பொதுச்சுடர் ஏற்றினார்!

தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மிகவும் கண்ணீர் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் உறவினர்களால் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் கூடி கண்ணீர் மழையில் மாவீரர்களை அஞ்சலித்தனர்.
இதன்படி மாவீரர்களுக்கான பிரதான ஈகைச்சுடரினை மாலை 6.05 மணிக்கு மாவீரர் நெடியோனின் தாயார், கணேசன் ஜானகி ஏற்றிவைத்தார். அத்துடன் தமது பிள்ளைகளை நினைந்து பெற்றோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.