இராணுவ தளத்தில் திடீர் குண்டுவெடிப்பு!! -31 பேர் பலி, 400 பேர் காயம்-
கினியா நாட்டில் பேட்டா துறைமுக நகரத்தில் உள்ள இராணுவ தளத்தில் டைனமைட் வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் 31 பேர் உயிரிழந்ததுடன், 400ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இக் குண்டுவெடிப்பால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக கினியா சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.
டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விடயங்களை கவனத்தில் கொள்ளாமையே இந்த வெடிவிபத்துக்குக் காரணம் என்று கினியா டியோடோரா ஓபியாங் தகவல் தெரிவித்துள்ளார்.