SuperTopAds

மியான்மரிலிருந்து குடும்பத்துடன் தப்பியோடும் பொலிஸார்!! -எல்லைகளை தாண்டி இந்தியாவில் தஞ்சம்-

ஆசிரியர் - Editor II
மியான்மரிலிருந்து குடும்பத்துடன் தப்பியோடும் பொலிஸார்!! -எல்லைகளை தாண்டி இந்தியாவில் தஞ்சம்-

மியான்மர் இராணுவத்தின் உத்தரவுகளை ஏற்க மறுத்துவரும் அந்நாட்டுப் பொலிஸார் பலர் அடைக்கலம் தேடி குடும்பங்களுக்குடன் எல்லைகளை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

அண்மையில் மட்டும் சுமார் 30 பொலிஸ் அதிகாரிகள் அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

இந்நிலையில் இவ்வாறு எல்லை தாண்டி இந்தியாவுக்குள் அடைக்கலம் புகுந்துள்ள பொலிஸாரைத் திரும்பி அனுப்புமாறு மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் இந்தியாவைக் கோரியுள்ளனர். இருப்பினும் அது தொடர்பான அறிவிப்பு எதனையும் இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை வெளியிடவில்லை.