இலங்கையில் முதல்தடவையாக கொவிட் -19 தொற்றினால் உயிரிழந்த இருவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது..!
கொவிட் -19 தொற்றினால் உயிரிழந்த இருவரின் சடலங்கள் இலங்கையில் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடி - சூடுபத்தினசேனை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த இரண்டு சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சடலங்களை அடக்கம் செய்யப்படும் போது, மத அனுஸ்டானங்களை மேற்கொள்ளவும், உறவினர்கள் இரண்டு பேர் வீதம் பங்கேற்பதற்கும் அனுமதியளிக்கபட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்ககோரி கடந்தகாலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டன.
இந்த நிலையில், நீண்ட காலத்திற்கு பின்னர் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்,
அதற்கென சுகாதார அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.இந்த நிலையில், சடலங்களை அடக்கம் செய்ய சில இடங்கள் பரிந்துரைக்கப்பட்டடிருந்த நிலையில்,
இரணைத்தீவு பகுதியில் சடலங்களை அடக்கம் செய்ய திர்மானிக்கபட்டது இதற்கு இரணைத்தீவு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிட்டிருந்ததுடன்,
போராட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது