SuperTopAds

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலை மீறி இலங்கையில் 2 வயது குழந்தைக்கு கொவிட்19 தடுப்பூசி..!

ஆசிரியர் - Editor I
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலை மீறி இலங்கையில் 2 வயது குழந்தைக்கு கொவிட்19 தடுப்பூசி..!

உலக சுகாதார ஸ்தாபனத்தில் அறிவுறுத்தல்களை மீறி இலங்கையில் 2 வயதான குழுந்தைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பி.பி.சி சிங்கள செய்தி சேவை சுட்டிக்காட்டியிருக்கின்றது. 

கிரிபத்கொட பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் BBC சிங்கள செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளதாகவும். தனக்கு தெரிந்த ஒருவரின் ஊடாக தான் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதுடன், 

தனது இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ரீதியில் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எந்தவொரு சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதுடன், 

உலக சுகாதார ஸ்தாபனம் அது தொடர்பில் தெளிவுபடுத்தல்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த கொவிஸீல்ட் தடுப்பூசியானது பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் போது 18 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படகூடாது 

எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், இலங்கையில் ஒரு நடைமுறை திட்டம் இன்றியே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக BBC சிங்கள செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.