SuperTopAds

கனேடிய நாட்டவரை விடுவிக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது..!

ஆசிரியர் - Editor I
கனேடிய நாட்டவரை விடுவிக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது..!

தடுத்துவைக்கப்பட்டிருந்த கனேடிய நாட்டவரை விடுதலை செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மஹரகம பொலிஸ் நிலைய சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மஹரகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய பிரஜை ஒருவர் மற்றும் கெப் வண்டியை விடுவிப்பதற்காக இலஞ்சம் பெற்றப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர், 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய குறிப்பிட்டார்.மஹரகம நகரில் வைத்து இலஞ்சம் பெற்ற போதே பொலிஸ் சார்ஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.